/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
குழவியை போட்டு கணவனை கொன்ற மனைவி
/
குழவியை போட்டு கணவனை கொன்ற மனைவி
ADDED : பிப் 18, 2025 06:27 AM

தஞ்சாவூர்: கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவனின் தலையில் அம்மிக்குழவியை போட்டு கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டியை சேர்ந்தவர் அன்பரசன், 42. இவரது மனைவி கலைவாணி, 38. இவர்களுக்கு, 12, 9 வயதில், இரு மகன்கள் உள்ளனர். அன்பரசன் குடும்பத்துடன் கும்பகோணம் அருகே மதுளம்பேட்டையில் வசித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள பேக்கிரியில் நான்கு ஆண்டுகளாக டீ மாஸ்டராக இருந்தார். அங்கு, ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த கலைவாணி, கள்ளக்காதலை கைவிட கணவனை கண்டித்தார்.
இதனால், இரு மாதங்கள் முன், தச்சு தொழிலுக்கு அன்பரசன் மாறினார். இருப்பினும், அவர் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்தார்.
இந்த விவகாரத்தால், நேற்று முன்தினம் மாலை தம்பதிக்கு தகராறு ஏற்பட்டது. பின், துாங்கிய அன்பரசன் தலையில், கலைவாணி அம்மிக்குழவி கல்லை போட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். கும்பகோணம் மேற்கு போலீசார் கலைவாணியை நேற்று கைது செய்தனர்.

