/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மாணவனுக்கு தொல்லை; சக மாணவர்கள் 4 பேர் கைது
/
மாணவனுக்கு தொல்லை; சக மாணவர்கள் 4 பேர் கைது
ADDED : டிச 15, 2025 02:21 AM
தஞ்சாவூர்: விடுதியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த, சக மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூரில், அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்க விடுதியில், தங்கி படிக்கும், 14 வயதுடைய 9ம் வகுப்பு மாணவனை, அதே விடுதியில் தங்கி படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் இருவர், 10 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் என நான்கு பேர், சில மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
தகவலில் மாணவரின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் புகார் அளித்தனர். அவர், பாலியல் தொந்தரவு அளித்த நான்கு மாணவர்களையும் விடுதியில் இருந்து நீக்கி, நடவடிக்கை எடுத்தார்.
மேலும், குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன் புகாரில், தஞ்சாவூர் மகளிர் போலீசார், நேற்று முன்தினம் நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ வழக்கு பதிந்து, சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

