/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பள்ளி ஆண்டு விழாவில் மது குடித்த மாணவியர்
/
பள்ளி ஆண்டு விழாவில் மது குடித்த மாணவியர்
ADDED : பிப் 26, 2026 07:05 AM
தஞ்சாவூர்: பள்ளி ஆண்டு விழாவில், மாணவியர் மது அருந்திய காட்சி வேகமாக பரவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இந்நிலையில், 20ம் தேதி, பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. அப்போது பிளஸ் 2 மாணவியர் நான்கு பேர், பள்ளியின் அருகே காவிரி ஆற்றில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இது குறித்து அறிந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவியரின் பெற்றோரை வரவழைத்து, 'மாணவியரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். தேர்வுக்கு நேரடியாக அனுப்புங்கள். இது போல, மாணவியர் இனிமேல் நடந்து கொள்ளக்கூடாது' என அறிவுரை கூறி அனுப்பினர்.
இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

