/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சர்க்கரை ஆலையின் நிர்வாக குளறுபடி குறையும் கரும்பு சாகுபடி பரப்பளவு
/
சர்க்கரை ஆலையின் நிர்வாக குளறுபடி குறையும் கரும்பு சாகுபடி பரப்பளவு
சர்க்கரை ஆலையின் நிர்வாக குளறுபடி குறையும் கரும்பு சாகுபடி பரப்பளவு
சர்க்கரை ஆலையின் நிர்வாக குளறுபடி குறையும் கரும்பு சாகுபடி பரப்பளவு
ADDED : அக் 02, 2024 10:17 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., தியாகராஜன், சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், கரும்பு விவசாயிகள் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெரும் முயற்சியால் குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கொண்டு வரப்பட்டது. இதில், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுகள் உறுப்பினராக உள்ளனர்.
தொடக்கத்தில் 4.50 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் 2 லட்சம் டன் மட்டுமே அரவை செய்யப்படுகிறது. ஆலையில், ஊழல் முறைகேடுகள் நடைபெற்று நீதிமன்றம் வரை வழக்கு உள்ளது.
ஆலையில் நிர்வாக திறமையின்மை காரணத்தால் கரும்பு சாகுபடியின் பரப்பளவு ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. அதனை உயர்த்த நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சர்க்கரை ஆலையில் 2,500 மூட்டை சர்க்கரை இருப்பு வைக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் நனைந்து சேதமாகியது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் என்பது விவசாயிகளை முன்நிறுத்தி, பங்குதாரர்களாக இணைத்து செயல்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் அதிகாரிகளை சென்று சந்திக்கச் சென்றால், அதிகாரிகள் சந்திக்க மறுக்கிறார்கள்.
நலிவடைந்து வந்த இந்த ஆலையை மீட்க கரும்பு விவசாயிகள் பெரும் சட்டப்போராட்டத்தை நடத்தி மீட்டுள்ளோம். ஆனால் அதிகாரிகள் ஆலையை நலிவுக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவதை விவசாயிகளால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு விவசாயிகள் பேசினார்.
இதுதொடர்பாக கலெக்டர் அளித்த பதில்:
ஆலையில் நடைபெறும் நிர்வாக குளறுபடிகள் விரைவில் தீர்க்கப்படும். விவசாயிகள் நிர்வாகத்தில் தலையிட வேண்டாம். அதனை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். சாகுபடி பரப்பையும், அரவைத் திறனையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும.
இவ்வாறு அவர் கூறினார்.