/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சக்கராப்பள்ளி கோவில் சூரியதேவர் சன்னிதி மாயம்; போலீசில் புகார்
/
சக்கராப்பள்ளி கோவில் சூரியதேவர் சன்னிதி மாயம்; போலீசில் புகார்
சக்கராப்பள்ளி கோவில் சூரியதேவர் சன்னிதி மாயம்; போலீசில் புகார்
சக்கராப்பள்ளி கோவில் சூரியதேவர் சன்னிதி மாயம்; போலீசில் புகார்
ADDED : டிச 11, 2024 02:26 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில், முதலாம் ஆதித்யசோழன் காலத்தில் கட்ட துவங்கி, முதலாம் பராந்தகன் காலத்தில் முடிக்கப்பட்டுள்ளதாக இரண்டு கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.
முதல் கல்வெட்டின்படி கோவிலில் சூரியதேவருக்கு தனி சன்னிதி கட்டப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் குறித்து இந்திய தொல்லியல் துறையால் 1965ம் ஆண்டு எடுக்கப்பட்ட பதிவுகளில் உள்ளது.
அதன்படி, முதலாம் ராஜராஜசோழனால், சூரியதேவருக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டது. இன்று கோவிலில் சூரியதேவருக்கான சன்னிதி இல்லை.
மேலும், சூரியதேவரின் திருமேனி தலையில்லாமல், முழங்கால் இல்லாமல் உடைந்த நிலையில், கோவில் வடமேற்கில் உள்ள திருச்சுற்று மதில் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. 1,036 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் முதல்முறையாக சூரியதேவருக்கு என்று எழுப்பப்பட்ட கோவில் இது தான்.
சூரியதேவர் சன்னிதியில் இருந்த கலைநயம் மிக்க கல்துாண், விமானங்கள் திருடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருடப்பட்ட கல்துாண் மற்றும் விமானங்களை மீட்க வேண்டும் என அய்யம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல், கிராம மக்களுடன் நேற்று புகார் அளித்தார்.
பொன்மாணிக்கவேல் கூறியதாவது:
சக்கரவாகேஸ்வரர் கோவிலில் சூரியதேவர் சன்னிதி தடயமின்றி முற்றும் அழிந்துபோன நிலையில், அங்கிருந்த சூரியதேவர் கல்துாண் காணவில்லை. விரைவில் சூரிய தேவர் சன்னிதி உருவாக்கப்பட்டு வழிபாட்டை துவங்க வேண்டும்.
அறநிலையத்துறையால் கன்சர்வேஷன் விங் என, 224 -பேரை கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்குவதற்கு அறநிலையத்துறைக்கு எந்த தகுதியும் கிடையாது. கோவிலுக்கு வழிபாடு செய்ய வரும் அமைச்சர் உள்ளிட்ட பெரிய ஆட்களை கையில் வைத்துக்கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.
கோவில்களை புனரமைக்க, 13 -வகையான நிதிகளில் மொத்தம் 2,000 கோடி ரூபாய் உள்ளது. இதை ஊழல் செய்வதற்காகவே உருவாக்கி உள்ளனர். 100- ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்களை புனரமைக்கும் தகுதி தொல்லியல் துறைக்கு மட்டுமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

