ADDED : ஜன 10, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியிடம், அங்கு ஆசிரியராக பணியாற்றும் மோகன் ரவி, 58, என்பவர் கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த மாணவியின் பெற்றோர் திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மோகன் ரவி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று மோகன் ரவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர்.