/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ரூ.3 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு
/
ரூ.3 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு
ADDED : ஜூலை 18, 2025 08:52 PM
தஞ்சாவூர்:கும்பகோணத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலம் மீட்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 1,221 சதுரடி இடம், வடக்கு வீதியில் உள்ளது. இந்த இடத்தில், ஏ.எஸ்.மாரிமுத்து என்ற ஐவுளிக்கடை இயங்கி வந்தது.
இதன் உரிமையாளர், முறைகேடாக ஆவணங்களை தயாரித்து, வங்கியில், 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்றதாக
கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐவுளிக்கடை உரிமையாளர் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்தாததால், வங்கி நிர்வாகம், அந்த இடத்தை ஏலம் விடப்போவதாக அறிவித்தனர்.
இதையறிந்த கோவில் நிர்வாகத்தினர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் இறுதி விசாரணையில், அந்த இடத்தை மீட்டு கையகப்படுத்த ஜூலை, 1ம் தேதி உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, கும்பகோணம் அறநிலையத்துறை துணை கமிஷனர் ராமு தலைமையிலான அதிகாரிகள், கட்டடத்திற்கு சீல் வைத்து, கோவில் நிர்வாகத்திடம் நேற்று இடத்தை ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு, 3 கோடி ரூபாய்.