நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவேதிகுடியில், வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பலர் குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர்.
மனாங்கோரையில் உள்ள நிலத்தினை, 1981ம் ஆண்டு முதல் 44 ஆண்டுகளாக, ஷேக்தாவூத் என்பவர், நஞ்சை நிலத்தில் சாகுபடி செய்து வந்தார். ஆனால், கோயிலுக்கு செலுத்த வேண்டிய உரிய குத்தகை தொகையை செலுத்தவில்லை.
நிலத்தை மீட்கும் முயற்சியாக, தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிலத்தை மீட்க கோயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தஞ்சாவூர் வருவாய் நீதிமன்ற ஆய்வாளர் புவனேஸ்வரி, வருவாய்துறையினர் இணைந்து 3.21 ஏக்கர் நிலத்தை நேற்று மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 2 கோடி ரூபாய்.