/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சையில் செப்.,13ல் உண்ணாவிரதம் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் சங்க பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
/
தஞ்சையில் செப்.,13ல் உண்ணாவிரதம் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் சங்க பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
தஞ்சையில் செப்.,13ல் உண்ணாவிரதம் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் சங்க பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
தஞ்சையில் செப்.,13ல் உண்ணாவிரதம் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் சங்க பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : செப் 01, 2011 11:45 PM
கும்பகோணம்: 'கும்பகோணத்தில் நடந்த தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர்கள் சங்க பொதுக்குழுவில், தஞ்சை மண்டல மேலாளர் அலுவலகம் முன் வருகிற 13ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்கத்தின் தஞ்சை மண்டல பொதுக்குழு கூட்டம் நடந்தது. மண்டலத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். குருநாதன், சீனிவாசன், ரெங்கசாமி முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் நாராயணசாமிராஜா வரவேற்றார்.
கூட்டத்தில், ஜி.ஆர். மூப்பனார், மாநில பொதுச்செயலாளர் இளவரி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாங்கம், பேரவை மாநிலத்தலைவர் ராம்குமார், மாநிலப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாநில தலைவர் பூமிநாதன், மாநில துணை பொதுச்செயலாளர் பழனி, நகர காங்கிரஸ் தலைவர் சங்கர், திருநாகேஸ்வரம் நகர காங்கிரஸ் தலைவர் சண்முகம் உள்ளிட்ட திரளான காங்கிரஸார், சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், சம்பத் மூப்பனார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதுநிலை மண்டல மேலாளர் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலிருந்தும், தாலுக்கா கிடங்கிலிருந்தும், திறந்தவெளி சேமிப்பு மையங்கள், கொள்முதல் அலுவலர்கள், உதவி மேலாளர்கள், துணை மேலாளர்கள், அறவை முகவர்கள் என அனைவரிடமும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வருவதை கண்டிப்பது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளரின் லஞ்ச லாவண்யம், அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல், அடாவடித்தனம், தொழிலாளர் விரோதப் போக்கு ஆகியவற்றை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 13ம் தேதி அடையாள உண்ணாவிரத போராட்டமும், 27ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதமும் தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல அமைப்பு செயலாளர் பாலகுமாரன் நன்றி கூறினார்.