/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
குடந்தை அருகே கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாப பலி
/
குடந்தை அருகே கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாப பலி
குடந்தை அருகே கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாப பலி
குடந்தை அருகே கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாப பலி
ADDED : செப் 03, 2011 12:31 AM
கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பியான இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோவில் அருகேயுள்ள இந்திராநகரைச் சேர்ந்தவர் ராமசாமி(85). இவரது மகன் முத்துக்குமார்(50). தச்சு வேலை செய்துவருகிறார். இவரது மனைவி மல்லிகா. இவர்களது மகன்கள் ஹரிஹரன்(12), ஆதிவராகன்(10). இதில் ஹரிஹரன் 6ம்வகுப்பும், ஆதிவராகன் 5ம்வகுப்பும் படித்து வந்தனர். நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் என்பதால் ஹரிஹரன், ஆதிவராகன் இருவரையும் அவர்களின் தாத்தா ராமசாமி திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலில் அவர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு கோவில் வளாகத்திலேயே அமர்ந்திருந்தனர்.
சிறுவர்கள் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் தெப்ப குளத்தின் கரையில் விளையாடியபோது எதிர்பாராதவிதமாக இருவரும் தவறி குளத்தில் விழுந்தனர். இதற்கிடையில் விளையாடிய சிறுவர்கள் நீண்டநேரம் ஆகியும் காணாததால் ராமசாமி தேடினார். ஆனால், சிறுவர்கள் கிடைக்கவில்லை. பின்னர் சிறுவர்கள் இருவரும் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என நினைத்து வீட்டிற்கு சென்றபோது அங்கேயும் அவர்கள் வரவில்லை என தெரிந்தது. அதற்குள் இரவு நேரம் என்பதால் விடிந்து தேடலாம் என நினைத்துவிட்டனர்.
நேற்று திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில் தெப்பக்குளத்தில் அந்த சிறுவர்களின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்து வந்து பார்த்தபோது இறந்து கிடந்தது ஹரிஹரன், ஆதிவராகன் என தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு திருவிடைமருதூர் தாசில்தார் ஆரோக்கியம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றினர். வி.ஏ.ஓ., கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் போலீஸார் விசாரிக்கின்றனர். கும்பகோணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் குளத்தில் மீழ்கி இறந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.