ADDED : செப் 20, 2011 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வங்கியில் கடன் செலுத்த இயலாத விவசாயிகளுக்கான 'லோக் அதாலத்' நடந்தது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்த இயலாத விவசாயிகளுக்கான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. தஞ்சாவூர், திருவையாறு பகுதி விவசாயிகளுக்காக நடந்த முகாமில், வங்கியின் மண்டல மேலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். திருச்சி உதவி துணை மேலாளர் (ஊரக வளர்ச்சித்துறை) கௌசல்யா முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி முகமது அலி, ஓய்வுப்பெற்ற நீதிபதி நஷீர் அகமது ஆகியோர் விவசாயிகளிடம் பேசி, கடன்களுக்கு தீர்வு கண்டனர். வங்கி அதிகாரிகள் மற்றும் இலவச சட்டப்பணிகள் குழுவினர் பங்கேற்றனர். 100 விவசாயிகள் பயனடைந்தனர்.