/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
/
தஞ்சை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
தஞ்சை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
தஞ்சை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
ADDED : அக் 17, 2025 02:11 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல்தோட்டம் பகுதியை சேரந்த பாயிஸ்அக்ரம் என்பவருக்கு சொந்தமான நாட்டுபடகில், கள்ளிவயல்தோட்டம் பகுதியை சேர்ந்த முரளி,30, ராமநாதபுரத்தை சேர்ந்த குமார்,32, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த ராஜா,53, ஆகியோர் நேற்றுமுன்தினம் மீன்பிடிக்க சென்றனர்.இந்நிலையில் நேற்று மதியம், நாட்டுப்படகில் இன்ஜின் பழுதானதால், திசைமாறி இலங்கை கடல் எல்லையான, யாழ்பாணம் மாவட்டம் அனலைத்தீவுக்கு, மீனவர்களின் படகு சென்றது. இதையடுத்து அவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச் செயலாளர் தாஜூதீன் கூறியதாவது:
கள்ளிவயல்தோட்டத்தை மீனவர்களின் படகு, டீசல் இல்லாமல், இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியதாக தகவல் கிடைத்துள்ளன. தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரிடம் பேசி, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம். உடனே, அரசு தரப்பில், இலங்கை கடற்படையினரிடம் பேசி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.