/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர் சஸ்பெண்ட்
/
தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர் சஸ்பெண்ட்
ADDED : நவ 21, 2024 01:14 AM
தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர் சஸ்பெண்ட்
தஞ்சாவூர், நவ. 21-
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு நேரில் அவரிடம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தராக பணியாற்றி வந்தவர் திருவள்ளுவன், 59. இவர் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி, தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தராக, கவர்னர் ரவியால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2021ம்ஆண்டு டிசம்பர் 13ம் தேதி திருவள்ளுவன் தமிழ் பல்கலைக் கழகத்தின் 13-வது துணைவேந்தராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் வரும் டிசம்பர் 12ம் தேதியோடு திருவள்ளுவனின் துணைவேந்தர் பதவி காலம் நிறைவடைய இருந்தது.
இந்நிலையில் நேற்று, கவர்னரின் செயலாளர் கிர்லோஸ்குமார், துணைவேந்தர் திருவள்ளுவனை சஸ்பெண்ட் செய்து அதற்கான உத்தரவு நகலை அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்த துணைவேந்தர் திருவள்ளுவனிடம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்து, தனது குடியிருப்பில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்றார். தமிழ்ப் பல்கலைக் கழக வரலாற்றில் துணைவேந்தர்கள் யாரும் இப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை.
துணைவேந்தர் பதவியை திருவள்ளு
வன் நிறைவு செய்ய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என பல்கலைகழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்பல்கலைகழக பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் வந்து சென்ற சில நாள்களில், துணை வேந்தர் திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பல்கலைக்கழக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.