/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தென்னிந்திய தேக்வாண்டோ போட்டி குடந்தை வித்யாமந்தீர் பள்ளி சாதனை
/
தென்னிந்திய தேக்வாண்டோ போட்டி குடந்தை வித்யாமந்தீர் பள்ளி சாதனை
தென்னிந்திய தேக்வாண்டோ போட்டி குடந்தை வித்யாமந்தீர் பள்ளி சாதனை
தென்னிந்திய தேக்வாண்டோ போட்டி குடந்தை வித்யாமந்தீர் பள்ளி சாதனை
ADDED : ஆக 09, 2011 01:38 AM
கும்பகோணம்: தென்னிந்திய அளவிலான தேக்வாண்டோ போட்டியில் கும்பகோணம்
சி.பி.வித்யாந்தீர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று
சாதனை படைத்துள்ளனர்.தென்னிந்திய அளவிலான 14வது தேக்வாண்டோ சாம்பியன்ஷிப்
போட்டி கும்பகோணத்தில் நடந்தது.
இந்த போட்டியில் ஏழு மாநிலங்களிலிருந்து
400 பேர் பங்கு பெற்றனர். இதில், கும்பகோணம் சி.பி.வித்யாமந்தீர்
மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டியில் பங்கு கொண்டு 5
தங்கப்பதக்கமும், 3 வெள்ளி பதக்கமும், 4 வெண்கலப் பதக்கமும் என, மொத்தம் 12
பதக்கங்களை பெற்றனர். மூன்று மாணவர்கள் பிளாக்பெல்ட் தேர்வில் பங்கேற்று
தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் நாகராஜனையும்
பள்ளியின் தாளாளர் பொன்.சிதம்பரநாதன், காவிரி டெல்டா தேக்வாண்டோ
அசோசியேஷன் பொதுச்செயலாளர் காசிவிஸ்வநாதன், மருத்துவ ஆலோசகர் சுரேஷ்
ஆகியோர் பாராட்டினர்.