/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கட்டணம் கட்டியும் அமைச்சர் துவக்கிய 1 டூ 1 பஸ் டேல்கேட்டில் நிறுத்திவைப்பு டிரைவர் - டேல்கேட் அதிகாரி வாக்குவாதம்; பயணியர் அதிர்ச்சி

ADDED : ஏப் 16, 2025 08:45 PM
தஞ்சாவூர்'தஞ்சாவூர் - சோழபுரம் வரையிலான புதிய தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் - கும்பகோணம் வரை 1 டூ 1 அரசு பஸ் சேவை, 13ம் தேதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரால், கும்பகோணத்தில் துவங்கப்பட்டது. இதில் ஒரு பஸ், தஞ்சாவூர் பணிமனையில் இருந்தும், இரு பஸ்கள் கும்பகோணம் பணிமனையில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று காலை கும்பகோணம் புதிய ஸ்டாண்டில் இருந்து, 45 பயணியருடன், தஞ்சாவூருக்கு புறப்பட்ட அரசு பஸ், வேம்புக்குடி டோல்கேட்டிற்கு வந்தது. அப்போது டோஸ்கேட் அதிகாரி, 'பஸ்சுக்கான டோல்கேட் கட்டணம் செலுத்தவில்லை' எனக் கூறி, பஸ்சை தடுத்து நிறுத்தினார்.
அதிர்ச்சியடைந்த பயணியர், 'உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள்' என டிரைவரிடம் கூறினர். இதையடுத்து, அதிகாரிகளின் அறிவுறுத்தலில், பஸ் டிரைவர், டோல்கேட் அதிகாரியிடம், 'பஸ்சுக்கான டோல்கேட் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது' எனக் கூறினார். ஆனால், டோல்கேட் ஊழியர்கள் மறுத்தனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது.
வேம்புக்குடி டோல்கேட் வழியாக செல்ல, 1 டூ 1 மூன்று பஸ்களுக்கும், 30 நாட்களுக்கான டோல்கேட் கட்டணத்தை, ஏற்கனவே ஆன்லைனில் செலுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆதாரத்துடன் கூறினர். அதன்பிறகு, டோல்கேட்டை கடந்து, தஞ்சாவூருக்கு பஸ் சென்றது. இதனால், அரை மணி நேரம் பஸ் சேவை பாதிக்கப்பட்டது.