sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

முதல்வர் தனக்குத்தானே பாராட்டு: சிறந்த பரிசு தரலாம்: முருகன்

/

முதல்வர் தனக்குத்தானே பாராட்டு: சிறந்த பரிசு தரலாம்: முருகன்

முதல்வர் தனக்குத்தானே பாராட்டு: சிறந்த பரிசு தரலாம்: முருகன்

முதல்வர் தனக்குத்தானே பாராட்டு: சிறந்த பரிசு தரலாம்: முருகன்

29


UPDATED : ஜன 28, 2025 10:45 AM

ADDED : ஜன 28, 2025 05:15 AM

Google News

UPDATED : ஜன 28, 2025 10:45 AM ADDED : ஜன 28, 2025 05:15 AM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:

மத்திய இணையமைச்சர் முருகன் பேட்டி: பா.ஜ.,வின் முழு முயற்சியால், டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் மேலுார் பகுதிக்கு சென்று, தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தி, நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதற்காக அவருக்கு சிறந்த பரிசு தரலாம். டங்ஸ்டன் சுரங்கம் தங்களால் தான் நிறுத்தப்பட்டுள்ளதாக போலியான பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

பொதுசிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் படிப்படியாக கொண்டுவரப்படும்.

மக்களின் தலையில் மின்கட்டணம், சொத்து வரி என சுமையை சுமத்தி உள்ளது தி.மு.க., அரசு. மக்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிக பெரிய தோல்வியை தி.மு.க., சந்திக்கும்.

கவர்னர் மீது தமிழக அரசுக்கு மிகப்பெரிய காழ்புணர்ச்சி இருக்கிறது. கவர்னர் எது கூறினாலும், நாங்கள் கேட்கமாட்டோம் என்ற மனநிலையில் தான் தி.மு.க.,உள்ளது. தி.மு.க., அரசும், அமைச்சர்களும் கவர்னர் மீது தனிப்பட்ட தாக்குதலையும், வன்மத்தையும் கொண்டுள்ளனர்.

கவர்னர் பல்வேறு நல்ல விஷயங்களை செயல்படுத்த நினைகிறார். ஆனால், அரசு அதைக் கேட்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் முன்னிலையில் சலசலப்பு!


முன்னதாக, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்துக்கான பா.ஜ., தலைவர் அறிவிப்பை வெளியிடுவதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மத்திய இணையமைச்சர் முருகன். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பதவிக்கு, தற்போதைய மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், ஒரத்தநாட்டை சேர்ந்த கர்ணன், உஞ்சியவிடுதி துரை, கண்ணுகுடி துரைமுருகன் என நான்கு பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்து, முடிவுகள் நேற்று, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இதில், இரண்டாவது முறையாக ஜெய்சதீஷ் மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டார். அப்போது, மாவட்டத்தலைவர் ஜெய்சதீஷ் தேர்வுக்கு, மத்திய இணை அமைச்சர் முன், போட்டியிட்ட நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு, மேடையில் ஏறினர்.
உடனே, ஜெய்சதீஷ் ஆதரவாளர்களும் மேடையை நோக்கி வந்தனர். இதனால், அதிர்ந்து போன அமைச்சர், கூட்டத்தில் ஏற்பட்ட சலசப்பை அடக்கக் கேட்டுக் கொண்டார். அதில் பின், இரு தரப்பும் அமைதியாகினர்.








      Dinamalar
      Follow us