/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
போலீசாரின் தரம் குறைவது கவலை அளிக்கிறது: எச்.ராஜா
/
போலீசாரின் தரம் குறைவது கவலை அளிக்கிறது: எச்.ராஜா
ADDED : ஜன 03, 2025 03:00 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் பா.ஜ., மூத்த தலைவர் எச். ராஜா கூறியதாவது:
அண்ணா பல்கலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகருக்கு நீதிமன்றமே பாதுகாப்பு கொடுக்கும். ஏனென்றால், திருவேங்கடத்திற்கு ஆன கதி இவருக்கு ஆகிவிடும்.
ஞானசேகருக்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இதேபோல் ஆவுடையார் கோவிலில் பெண் குற்றம் சாட்டியுள்ள நபர் அமைச்சர் ரகுபதிக்கு நெருக்கமானவர்.
இதே போல் பல்கலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகர் தி.மு.க.,வின் பவள விழா ஏற்பாடுகளை செய்யும் அளவிற்கு செல்கிறார் என்றால் அவர் கட்சியில் முக்கியமானவராகத்தான் இருப்பார். அதனால் ஞானசேகர் போலீஸ் அதிகாரிகளை பயன்படுத்தி கொண்டிருப்பார் என்ற சந்தேகம் வருகிறது.
அண்ணா பல்கலை மாணவி பெயர் வெளியே வந்தது சட்டப்படி தவறு. தொழில்நுட்ப தவறினால் எப்.ஐ.ஆர்., வெளியே சென்றது என்றால், அதற்கு மனிதனின் தவறும் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் போலீஸ் யாரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மகளிர் ஆணையம், மூன்று பெண் போலீசார் கொண்ட டீம் சம்பவம் நடந்த நாளிலிருந்து, ஞானசேகரின் போன் கால் ஹிஸ்டரியை வைத்து உண்மையை கண்டறிய வேண்டும்.
அரசியலில் எல்லா தரப்பு மக்களும் இருப்பார்கள். ஆனால், சீமான் விவகாரத்தில் டி.ஐ.ஜி வருண் பேசியது, போலீஸ் அதிகாரிகளின் தரம் குறைந்து கொண்டே வருவது கவலை அளிக்கிறது என்றார்.

