/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மனநலம் குன்றிய நபர் குடும்பத்துடன் சேர்ப்பு கலெக்டருக்கு குடும்பத்தினர் நன்றி
/
மனநலம் குன்றிய நபர் குடும்பத்துடன் சேர்ப்பு கலெக்டருக்கு குடும்பத்தினர் நன்றி
மனநலம் குன்றிய நபர் குடும்பத்துடன் சேர்ப்பு கலெக்டருக்கு குடும்பத்தினர் நன்றி
மனநலம் குன்றிய நபர் குடும்பத்துடன் சேர்ப்பு கலெக்டருக்கு குடும்பத்தினர் நன்றி
ADDED : அக் 17, 2024 09:35 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் செப்., 8ம் தேதி பூதலுார் பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது, புதுப்பட்டி கிராமம் சாலையில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றிதிரிந்த நபரை பார்த்த கலெக்டர், அவரை, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி உதவியுடன், தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பின், தொடர் சிகிச்சை வாயிலாக சற்று உடல் நலம் தேறிய அந்த நபர், தன் ஊர் குறித்து தெலுங்கு தெரிந்த செவிலியர் ஒருவரிடம் தெரிவித்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கலெக்டருக்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து, கலெக்டர் உத்தரவில், போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட நபர், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், அம்மாவரிபேட்டா கிராமத்தை சேர்ந்த குஜல்லா பிரசாத், 38, என்பதை உறுதி செய்தனர்.
மேலும், அவருடைய தந்தை ராமன்ஜினேயல, தாய் நரசம்மா என்பதும், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், குஜல்லா பிரசாத் மனநலம் பாதிக்கப்பட்டு 2011ம் ஆண்டு வீட்டை விட்டு சென்றவர் என்பதையும் உறுதி செய்து, குஜல்லா பிரசாத் பெற்றேரை தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர்.
பிறகு, நேற்று முன்தினம் 13 ஆண்டுகளுக்கு பிறகு மகனை சந்தித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்கலங்கி ஆனந்தம் அடைந்தனர்.
சாலையில் சுற்றித்திரிந்த தங்களது மகனை பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்து உடல் நலத்தில் முன்னேற்றம் அடைய செய்த கலெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
மயிலாடுதுறை எம்.பி.,சுதா, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர், குஜல்லா பிரசாத்க்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.