/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அதிக தொகை வசூலித்த நிறுவனம்; ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
அதிக தொகை வசூலித்த நிறுவனம்; ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
அதிக தொகை வசூலித்த நிறுவனம்; ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
அதிக தொகை வசூலித்த நிறுவனம்; ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : நவ 13, 2024 10:59 PM
தஞ்சாவூர் ; தஞ்சாவூர், அருளானந்தா அம்மாள் நகரைச் சேர்ந்த, டாக்டர் முரளி, அவரது மனைவி ஆனந்தி இருவரும், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனத்தில் வீடு கட்ட சந்தை நிலவரங்களை பொறுத்து மாறுபடும் வட்டி வீத முறையில், இரண்டு கோடி ரூபாயை கடனாக வாங்கி இருந்தனர்.
கடன் தொகையை மாதந்தோறும் முறையாக செலுத்தி வந்தனர்.
ஆனால், அந்த நிதி நிறுவனம் அவ்வப்போது, வட்டி வீத மாற்றத்துக்கு ஏற்ப, கூடுதலாக தவணைத் தொகையை வசூல் செய்தது.
இதனால், அதிருப்தி அடைந்த முரளி - ஆனந்தி தம்பதி, முழுக்கடன் தொகையையும் செலுத்தி கடனை முடித்துக்கொள்ள பைனான்ஸ் நிறுவனத்தை அணுகினர்.
கடன் தொகைக்கு, 4 சதவீத வட்டி போட்டு, கடன் தொகை முழுவதையும், அந்த நிறுவனம் வசூல் செய்தது.
இது, இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைக்கு எதிரானது என்பதால், செலுத்திய பணத்தை திருப்பிக் கேட்டனர். ஆனால், அந்த பைனான்ஸ் நிறுவனம் பணத்தை தர மறுத்து விட்டது.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முரளி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஆணைய தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர் வேலுமணி ஆகியோர் அடங்கிய ஆணையம், கூடுதலாக வசூல் செய்த தொகையை, ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க உத்தரவிட்டனர்.
மேலும், முறையீட்டாளருக்கு ஏற்பட்ட சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10 லட்சம் ரூபாயும், வழக்கு செலவுத் தொகையாக 10,000 ரூபாயும் சேர்த்து ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

