/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கட்சி வரும் பின்னே; கவுன்சிலர் போனார் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக கரையும் அ.ம.மு.க.,
/
கட்சி வரும் பின்னே; கவுன்சிலர் போனார் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக கரையும் அ.ம.மு.க.,
கட்சி வரும் பின்னே; கவுன்சிலர் போனார் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக கரையும் அ.ம.மு.க.,
கட்சி வரும் பின்னே; கவுன்சிலர் போனார் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக கரையும் அ.ம.மு.க.,
ADDED : ஏப் 01, 2025 09:30 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், அ.ம.மு.க.,வில் இருந்த மாநகராட்சி பெண் கவுன்சிலர், திடுமென அ.தி.மு.க.,வுக்கு தாவியுள்ளார்.
தஞ்சாவூர் அ.ம.மு.க., மாநகர மாவட்ட மகளிரணி செயலராவும், மாநகராட்சி 36வது கவுன்சிலராகவும் இருப்பவர் கண்ணுக்கினியாள். அவருடைய கணவர் ஊரான பாபநாசம் தொகுதியில், அ.ம.மு.க., சார்பில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கண்ணுக்கினியாள் நேற்று முன் தினம் சேலம் சென்ற அவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டு, கடந்த 30ல் தன்னுடைய வார்டு பகுதியில் நலத் திட்ட உதவி வழங்கினார் கண்ணுக்கினியாள். அப்போது அனைவருக்கும் அ.ம.மு.க.,வின் குக்கர் கொடுத்தார். அ.ம.மு.க.,வின் சின்னமான குக்கரை இலவசமாக கொடுத்த கண்ணுக்குகினியாள், அடுத்த இரண்டே நாளில், அ.தி.மு.க., பக்கம் தாவியது, அ.ம.மு.க.,வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தி வரும் சூழலில், அ.ம.மு.க.,வும் விரைவில் அ.தி.மு.க.,வில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, இரு கட்சியினரிடமும் உள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க.,வில் அ.ம.மு.க., இணையும் முன்பாக, கண்ணுக்கினியால் அ.தி.மு.க.,வில் இணைந்து விட்டதாக தஞ்சாவூரில் பரபரப்பாக பேசுகின்றனர்.

