/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கவர்னர் பாதுகாப்பு பணிக்கு சென்ற எஸ்.ஐ., விபத்தில் பலி
/
கவர்னர் பாதுகாப்பு பணிக்கு சென்ற எஸ்.ஐ., விபத்தில் பலி
கவர்னர் பாதுகாப்பு பணிக்கு சென்ற எஸ்.ஐ., விபத்தில் பலி
கவர்னர் பாதுகாப்பு பணிக்கு சென்ற எஸ்.ஐ., விபத்தில் பலி
ADDED : அக் 20, 2024 01:39 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 49; பட்டுக்கோட்டை, மதுக்கூர் பகுதி குற்றப் புலனாய்வு தனிப்பிரிவில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார்.
நேற்று தஞ்சாவூர் தமிழ் பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு, கவர்னர் ரவி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக சென்றார். பணியை முடித்து, மீண்டும் பட்டுக்கோட்டைக்கு டூ - வீலரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
கரம்பயம் என்ற இடத்தில் சென்றபோது, அவ்வழியே வந்த லாரி, டூ - வீலர் மீது மோதியதில், செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாப்பாநாடு போலீசார், செந்தில்குமார் உடலை கைப்பற்றினர். செந்தில்குமார், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர். கடந்த 1997ல் காவல் துறையில் முதல்நிலை காவலராக பணியில் சேர்ந்தார்.
இவருக்கு, வனிதா, 45, என்ற மனைவியும், ஹரினி, 19, கீர்த்தனா, 16 ஆகிய இரு மகள்களும் உள்ளனர். செந்தில்குமார் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.