/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன் கைது

ADDED : பிப் 16, 2024 02:40 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டைவடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன்,55,. இவருக்கு மணிமாறன்,25, என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில மணிமாறன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டில் வேலைக்கு சென்ற நிலையில், போதிய சம்பளம் இல்லாததால் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி விட்டார்.
இந்நிலையில் மணிமாறன் தனக்கு திருமணம் செய்து வைக்ககோரி, தனது தந்தை சுப்பிரமணியனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதை போல நேற்றுமுன்தினம் நள்ளிரவு மீண்டும், மணிமாறன் ஏன் எனக்கு இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறி, சுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் முயற்றியதால், ஆத்திரமடைந்த மணிமாறன் அரிவாளை எடுத்து தந்தை சுப்பிரமணியின் தலையில் வெட்டியுள்ளார்.
இதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீசார், இறந்து கிடந்த சுப்பிரமணியனின் உடலை மீட்டனர். மேலும், தந்தையை கொலை செய்த மணிமாறனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.