/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஒரே நடையுடன் நிறுத்தப்பட்ட 'விடியல் பஸ்' மீண்டும் இயக்கம்
/
ஒரே நடையுடன் நிறுத்தப்பட்ட 'விடியல் பஸ்' மீண்டும் இயக்கம்
ஒரே நடையுடன் நிறுத்தப்பட்ட 'விடியல் பஸ்' மீண்டும் இயக்கம்
ஒரே நடையுடன் நிறுத்தப்பட்ட 'விடியல் பஸ்' மீண்டும் இயக்கம்
ADDED : மே 02, 2025 02:17 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு, தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து தெற்கு நத்தம், ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, கா.தெக்கூர், கா.கோவிலுார், கொல்லங்கரை, வடக்குப்பட்டு, சூரியம்பட்டி, நாஞ்சிக்கோட்டை வழியாக தடம் எண் பி11 அரசு டவுன் பஸ், ஏப்., 20ம் தேதி இயக்கப்பட்டது.
அந்த பஸ் சேவை ஒரே நாள், ஒரே நடையுடன் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இது தொடர்பாக, போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலம் பொதுமேலாளர் முத்துக்குமாரசாமி கூறுகையில், “பஸ் செல்லக்கூடிய கிராமங்களில் வளைவுகள் மற்றும் குறுகிய பாதை இருப்பதால், இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அருகில் உள்ள பாதை வழியாக தட ஆய்வு செய்து, தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து தெற்கு நத்தம், சேதுராயன் குடிகாடு வரை நீட்டிக்கப்பட்டு தடம் எண் வி74எப் என்ற பஸ் இயக்கப்படுகிறது,” என்றார்.

