/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
வீடு புகுந்து நகை திருடிய சகோதரர்கள் 2 பேர் கைது
/
வீடு புகுந்து நகை திருடிய சகோதரர்கள் 2 பேர் கைது
ADDED : மார் 20, 2025 02:46 AM
தஞ்சாவூர்:பேராவூரணி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகை திருடிய, அண்ணன் - தம்பி இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மையாண்டி கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம், சுமதி, தமிழரசி ஆகியோரின் வீடு புகுந்து, 16 சவரன் நகைகளை மர்மநபர்கள் பறித்தனர். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆவணம் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கிய இரு இளைஞர்கள், போலீசாரை கண்டு பதறி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
விசாரணையில், இருவரும் புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி அருகே வேதையன்குடி பகுதியை சேர்ந்த முத்துராமன், 25, காளிதாஸ்,22, என்பதும், சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், அம்மையாண்டி கிராமத்தில் 16 சவரன் நகைகளை, வீடு புகுந்து திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திருச்சிற்றம்பலம் போலீசார் முத்துராமன், காளிதாஸ் இருவரை கைது செய்தனர்.
இருவர் மீதும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.