/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சை, ராமேஸ்வரம் கோவிலில் இரு பக்தர்கள் மாரடைப்பால் பலி
/
தஞ்சை, ராமேஸ்வரம் கோவிலில் இரு பக்தர்கள் மாரடைப்பால் பலி
தஞ்சை, ராமேஸ்வரம் கோவிலில் இரு பக்தர்கள் மாரடைப்பால் பலி
தஞ்சை, ராமேஸ்வரம் கோவிலில் இரு பக்தர்கள் மாரடைப்பால் பலி
ADDED : மார் 19, 2025 07:44 AM

ராமேஸ்வரம் : திருச்செந்துாரை தொடர்ந்து, தஞ்சாவூர், ராமேஸ்வரம் கோவில்களில் நேற்று இரு பக்தர்கள் மூச்சுத்திணறி பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலம், சிகாரைச் சேர்ந்த ராஜ்தாஸ் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நடந்த ஸ்படிகலிங்க பூஜைக்கு 50 ரூபாய் கட்டண டிக்கெட் எடுத்து வரிசையில் சென்றார்.
அப்போது பக்தர்கள் கூட்ட நெரிசல் இருந்தது. ராஜ்தாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அங்கிருந்த கோவில் காவலர்கள் அவரை மீட்டு கோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். கோவில் போலீசார் வழக்கு பதிந்து அவரது உடலை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தஞ்சாவூர், பெரிய கோவிலுக்கு, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 68, தன் குடும்பத்துடன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
சுந்தரமூர்த்தி கழிப்பறைக்கு சென்று விட்டு, கேரளாந்தன் நுழைவு வாயில் பகுதியில், திடீரென நெஞ்சு வலிப்பதாக மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்சில் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் வழியிலேயே இறந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்செந்துாரில் வரிசையில் நின்ற பக்தர் ஒருவர் உயிரிழந்தது சர்ச்சையான நிலையில், ராமேஸ்வரம், தஞ்சாவூர் கோவில்களில் நேற்று இரு பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.