/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
டூ வீலர் -- கார் மோதல்; தந்தை, 2 மகன்கள் சாவு
/
டூ வீலர் -- கார் மோதல்; தந்தை, 2 மகன்கள் சாவு
ADDED : அக் 12, 2025 11:16 PM
தஞ்சாவூர்; டூ வீலர் மீது கார் மோதிய விபத்தில், தந்தை, இரண்டு மகன்கள் பலியாகினர்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே சோமநாதப்பட்டினத்தை சேர்ந்த காளிதாஸ், 35, மனைவி ரம்யா, 30, மகன்கள் ராகவன், 10, தர்ஷித், 3, ஆகியோருடன் டூ வீலரில் நேற்று மாலை மந்திரப்பட்டினத்தில் உள்ள ரம்யாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெரும்பண்ணையூரை சேர்ந்த ஆரோக்கியராஜ், 65, தன் உறவினர்களுடன், காரில் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அந்தோணியார் சர்ச் விழாவுக்கு சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினர்.
மந்திரிப்பட்டினத்தில் ஆடு சாலையின் குறுக்கே சென்றதால், அதன் மீது மோதாமல் இருக்க, ஆரோக்கிராஜ் காரை திருப்பியதில், காளிதாஸ் டூ வீலர் மீது மோதியது.
இதில், தர்ஷித் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். ரம்யா, ராகவன், காளிதாஸ் ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வழியிலேயே காளிதாஸ், ராகவன் இறந்தனர். ரம்யா சிகிச்சையில் உள்ளார். சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.