/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கோழி வாகனம் கவிழ்ந்து இரு தொழிலாளர்கள் பலி
/
கோழி வாகனம் கவிழ்ந்து இரு தொழிலாளர்கள் பலி
ADDED : மார் 01, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:மேற்கு வங்கம் மாநிலம், ஜூப்மயா பகுதியை சேர்ந்த ராஜேந்திர பக்டி, 25, தினபண்டு மஜ்ஹி, 25, மருதவான் பகுதியை சேர்ந்த மித்தோன் மஜ்ஹி, 24, ஆகிய மூவரும் தஞ்சாவூரில் உள்ள கோழிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தனர்.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டையில் உள்ள கோழி பண்ணையில் இருந்து நேற்று லோடு வேனில், கோழிகளை ஏற்றிக்கொண்டு, அந்த வண்டியின் பின்னால் மூவரும் அமர்ந்து கும்பகோணம் சென்றனர்.
அப்போது, சாலியமங்கலம் அருகே சென்ற போது வேன் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ராஜேந்திர பக்டி, தினபண்டு மஜ்ஹி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மித்தோன் மஜ்ஹி படுகாயமடைந்தார்.
அம்மாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

