/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு இரண்டாண்டு சிறை
/
லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு இரண்டாண்டு சிறை
ADDED : நவ 12, 2024 12:49 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில், ராஜராஜன் நகரை சேர்ந்த கார்த்திகேயன். இவர் 2011ம் ஆண்டு, கூட்டு பட்டாவை, தனிப்பட்டாவாக மாற்றி தரக்கோரி, அப்போதைய புளியந்தோப்பு வி.ஏ.ஓ., சுந்தரம், 56, என்பவரிடம் கேட்டார். அதற்கு, வி.ஏ.ஓ., சுந்தரம், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அறிவுரைப்படி, வி.ஏ.ஓ., சுந்தரத்திடம் கார்த்திகேயன் லஞ்ச பணத்தை கொடுத்த போது, கையும் களவுமாக சிக்கினார்.
இந்நிலையில், நேற்று கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா, குற்றம்சாட்டப்பட்ட சுந்தரத்துக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 8,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இப்போது, 69 வயதாகும் முன்னாள் வி.ஏ.ஓ., சிறையில் அடைக்கப்பட்டார்.

