/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அலுவலக கூரை பெயர்ந்து விழுந்து வி.ஏ.ஓ., காயம்
/
அலுவலக கூரை பெயர்ந்து விழுந்து வி.ஏ.ஓ., காயம்
ADDED : நவ 05, 2025 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வி.ஏ.ஓ., அலுவலகத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததில், வி.ஏ.ஓ., காயமடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், தென்பாதி கிராமத்தில், வி.ஏ.ஓ.,அலுவலகத்தில், தலையமங்கலம் வி.ஏ.ஓ., நடராஜன், 36, பொறுப்பில் இருந்தார். அங்கு, நெய்வாசல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான பாலசுந்தரம், 73, பாண்டியன், 55, இருவரும் சிட்டா அடங்கல் வாங்குவதற்காக காத்திருந்தனர்.
அப்போது, அலுவலகத்தின் கூரை சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததில், நடராஜன், பாலசுந்தரம், பாண்டியன் காயமடைந்தனர்.

