/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சை - சோழபுரம் சாலையில் வாகன போக்குவரத்து அனுமதி
/
தஞ்சை - சோழபுரம் சாலையில் வாகன போக்குவரத்து அனுமதி
தஞ்சை - சோழபுரம் சாலையில் வாகன போக்குவரத்து அனுமதி
தஞ்சை - சோழபுரம் சாலையில் வாகன போக்குவரத்து அனுமதி
ADDED : ஜன 25, 2025 01:55 AM

தஞ்சாவூர்:பாபநாசம் அருகே வேம்புக்குடியில் நேற்று முதல் சுங்கச்சாவடி செயல்படத் துவங்கியது.
தஞ்சாவூர் -- விக்கிரவாண்டி இடையே, புதிய புறவழிச்சாலை மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, 2018ல் பணி துவங்கியது.
தஞ்சாவூர் -- சோழபுரம் இடையே சாலைப்பணிகள் நிறைவடைந்த நிலையில், பாபநாசம் அருகே வேம்புக்குடியில் நேற்று முதல், சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு, சாலை பயன்பாட்டிற்கு வரத் துவங்கியது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், தஞ்சாவூர் -- விக்கிரவாண்டி திட்ட இயக்குனர் செல்வகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் -- விக்கிரவாண்டி சாலையில், தஞ்சாவூர் - சோழபுரம் இடையே பணி நிறைவடைந்து, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
வேம்புக்குடி சுங்கச்சாவடியில், கட்டணம் வசூலிக்கும் பணியும் துவங்கப் பட்டுள்ளது.
சோழபுரம் - சேத்தியாதோப்பு மற்றும் சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி சாலை பணி விரைவில் முடிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.