/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஆய்வு கூட்டத்தில் விஜிலென்ஸ் ரெய்டு
/
ஆய்வு கூட்டத்தில் விஜிலென்ஸ் ரெய்டு
ADDED : அக் 26, 2024 08:44 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை, 5:45 மணிக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி., தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அக்., 17ல், திருச்சி வட்டம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கந்தசாமி, திட்டப்பணிகள் ஆய்வு, நில கையகப்படுத்தல் தொடர்பாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில், கண்காணிப்பு பொறியாளர் கந்தசாமி அமர்ந்திருந்த இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்த போது, ஒரு வெள்ளை கவரில், 25,000 ரூபாய், காக்கி கவரில், 21,000 ரூபாய் என மொத்தம், 46,000 கணக்கில் வராத பணம் இருந்தது.
பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆய்வு கூட்டத்திற்கு வந்த அலுவலர்கள் மற்றும் கான்ட்ராக்டர்கள் ஆறு பேரிடம் இருந்து தனித்தனியாக கணக்கில் வராத, 68,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் ஒரு லட்சத்து, 14,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.