/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கண்காணிப்பு கேமரா உடைப்பு கிராம மக்கள் சாலை மறியல்
/
கண்காணிப்பு கேமரா உடைப்பு கிராம மக்கள் சாலை மறியல்
கண்காணிப்பு கேமரா உடைப்பு கிராம மக்கள் சாலை மறியல்
கண்காணிப்பு கேமரா உடைப்பு கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : டிச 05, 2024 03:20 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சீராளூர் கிராமத்தில், மர்ம நபர்கள் மது அருந்தி, சாலையில் செல்லும் பெண்களையும், பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பள்ளி, கல்லுாரி மாணவியரை கிண்டல் செய்தும், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்தனர்.
இத்தகைய நபர்களை கண்காணிக்க பஸ் ஸ்டாப் பகுதியில், கிராம மக்கள் சார்பில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
கூண்டுக்குள் இருந்த அந்த கேமராவை, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதை அறிந்த அந்த கிராம மக்கள், கேமராவை உடைத்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி, திருக்காட்டுப்பள்ளி - தஞ்சாவூர் சாலையில் நேற்று காலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் கிராம மக்களிடம் பேச்சு நடத்தி சமரசம் செய்தனர்.
இதற்கிடையில், 'சிசிடிவி' கேமராவில் உடைப்பதற்கு முன், அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அதை உடைத்ததாக, சீராளூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 33, கிருஷ்ணமூர்த்தி 32, கவுரிசங்கர், 32, ஆகியோரை கைது செய்து, கள்ளப்பெரம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.