/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
வாய்க்காலை காணோம்; ஆர்.டி.ஓ.,விடம் குமுறல்
/
வாய்க்காலை காணோம்; ஆர்.டி.ஓ.,விடம் குமுறல்
ADDED : மார் 21, 2025 11:44 PM

தஞ்சாவூர்; தஞ்சாவூர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., இலக்கியா தலைமையில், பூதலுார், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
திருவையாறு அருகே கூத்துார் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரெங்கராஜன் பேசியதாவது:
திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் தலைப்பில் இருந்து பிரியும் புதுவாய்க்கால், விஷ்ணம்பேட்டை, வடுக்குடி வழியாக, 8 கி.மீ., சென்று கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்காலால்10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சில ஆண்டுகளாக வாய்க்கால் துார்வாரப்படாமல் இருப்பதால், சீமைக்கருவேல மரங்கள் சூழந்துள்ளன. செங்கல் சூளை நடத்துபவர்கள் வெட்டி வாய்க்கால் கரைகளில் இருந்த மண்ணை எடுத்து விட்டனர். தற்போது வாய்க்கால் காணாமல் போய்விட்டது. வாய்க்காலை மீட்டு, மீண்டும் பாசனத்துக்கு பயன்படும் வகையில் மாற்றித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.