/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
இன்டர்சிட்டி எக்ஸ்பிரசுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு
/
இன்டர்சிட்டி எக்ஸ்பிரசுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு
ADDED : அக் 12, 2024 01:09 AM

தஞ்சாவூர்:'தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு ரயில் இயக்க வேண்டும்' என, ரயில் பயணியர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பலரும், தென்னக ரயில்வே அதிகாரிகள், எம்.பி.,க்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று முதல் மூன்று மாதங்களுக்கு சோதனை ஓட்டமாக திங்கள், வியாழன் தவிர்த்து வாரத்திற்கு ஐந்து நாட்கள், திருச்சியில் இருந்து தாம்பரம் வரை பகலில் இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதையடுத்து, ரயில் நேற்று அதிகாலை திருச்சியில் இருந்து புறப்பட்டு, தஞ்சாவூருக்கு வந்தது.
ரயில்வே ஸ்டேஷனில் எம்.பி., முரசொலி, ரயில் பயணியர் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும், ரயில் இன்ஜின் டிரைவருக்கு இனிப்புகள் வழங்கி, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

