/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
இயற்கை வாயு ஆய்வுக்கு டெல்டாவில் கிணறு அமைப்பு எரிசக்தி இயக்க அறிக்கையில் அம்பலம்
/
இயற்கை வாயு ஆய்வுக்கு டெல்டாவில் கிணறு அமைப்பு எரிசக்தி இயக்க அறிக்கையில் அம்பலம்
இயற்கை வாயு ஆய்வுக்கு டெல்டாவில் கிணறு அமைப்பு எரிசக்தி இயக்க அறிக்கையில் அம்பலம்
இயற்கை வாயு ஆய்வுக்கு டெல்டாவில் கிணறு அமைப்பு எரிசக்தி இயக்க அறிக்கையில் அம்பலம்
ADDED : செப் 22, 2025 03:58 AM
தஞ்சாவூர்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டாவில், இயற்கை எரிவாயுவான, 'ஷேல் காஸ்' ஆய்வு கிணறுகள் தோண்டப்பட்டுள்ள விபரம், எரிசக்தி இயக்க அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.
தஞ்சாவூரில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், சூழலியல் உப குழு ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி டெல்டா பகுதி, 2020ல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக, டெல்டா மாவட்டங்களான பெரியகுடி, திருவாரூர், அன்னவாசநல்லுாரில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தால், ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக 2024 - 25ல், எரிசக்தி இயக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேல் காஸ் என்பது ஒரு வகை இயற்கை வாயு.
டெல்டாவில், ஹைட்ரோ கார்பன் திட்ட நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருவது உறுதி.
இதனால், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், நீரியல் விரிசல் முறையில் மட்டும் நிறைவேற்ற சாத்தியமுள்ள ஷேல் ஆய்வு கிணறுகளை மறைமுகமாக தோண்டியிருப்பது அம்பலமாகி உள்ளது. இது தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானது.
கடந்த, 2023ல், வடசேரி பகுதியில் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்கம் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தது போல முதல்வர் ஸ்டாலின், ஓ.என்.ஜி.சி., நடவடிக்கைகள் குறித்தும், விதிகளுக்கு புறம்பாக மூன்று ஷேல் ஆய்வு கிணறுகள் தோண்டப்பட்டிருப்பது குறித்தும் உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மத்திய அரசு செயல்படுத்த முயலும் மன்னார்குடி மீத்தேன் திட்டம், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உட்பட மூன்று பகுதிகளில் கொண்டு வரப்பட் ட எண்ணெய் எரிவாயு திட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.