/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பெரியகோவிலுக்குள் ராஜராஜசோழன் சிலை எது தடுக்கிறது: கவிஞர் வைரமுத்து கேள்வி
/
பெரியகோவிலுக்குள் ராஜராஜசோழன் சிலை எது தடுக்கிறது: கவிஞர் வைரமுத்து கேள்வி
பெரியகோவிலுக்குள் ராஜராஜசோழன் சிலை எது தடுக்கிறது: கவிஞர் வைரமுத்து கேள்வி
பெரியகோவிலுக்குள் ராஜராஜசோழன் சிலை எது தடுக்கிறது: கவிஞர் வைரமுத்து கேள்வி
ADDED : நவ 12, 2024 01:14 AM
தஞ்சாவூர், நவ. 12-
தஞ்சாவூர் பெரியகோவிலில், மாமன்னன் ராஜராஜசோழனின் 1039வது சதய விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் என சொல்லக்கூடிய பெரிய கோவிலை கட்டிய மாமன்னன், தமிழர்களின் வரலாற்றுப் பெரு மன்னன். அவரது திருவுருவ சிலையை கோவிலுக்கு வெளியே இருக்கிறது.
அதை அந்த நிலையில் காணும் போதெல்லாம் தமிழர்களின் நெஞ்சங்களில் குருதி கசிகிறது. 2 லட்சம் டன் கற்களை கொண்டு கோவில் கட்டிய மன்னன் சிலை வெளியே இருக்கிறது.
மனித சிலையை கோவிலுக்குள் வைக்கக்கூடாது என்று ஆகம விதிகள் சொல்லுகிறது என, மத்திய அரசு கருதுகிறதோ. மாமன்னன் ராஜராஜசோழன் கோவிலை கட்டிய போது தேவாரம் பாடிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் சிலைகளையும் செப்பு திருமேனிகளாக இந்த கோவிலில் வைத்து, மனிதர்களை மனிதர்களால் வணங்கச் செய்தான்.
மனிதராகிய தேவார பாடிய மூவரை இந்த கோவிலுக்குள் வைத்து வணங்குவதற்கு ஆகம விதி அனுமதிக்கும்போது, ராஜராஜன் என்ற மனிதன் சிலையை வளாகத்தில் வைப்பதற்கு எது தடுக்கிறது என தெரியவில்லை. விரைவில், மாமன்னன் ராஜராஜன் சிலை கோவில் வளாகத்திற்குள் நிறுவப்பட வேண்டும் என்பது தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.