/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
முத்தரையர் சமுதாயத்தினர் ஆதரவு யாருக்கு? அதிமுக புது வியூகம்
/
முத்தரையர் சமுதாயத்தினர் ஆதரவு யாருக்கு? அதிமுக புது வியூகம்
முத்தரையர் சமுதாயத்தினர் ஆதரவு யாருக்கு? அதிமுக புது வியூகம்
முத்தரையர் சமுதாயத்தினர் ஆதரவு யாருக்கு? அதிமுக புது வியூகம்
ADDED : மார் 28, 2024 11:54 AM

லோக்சபா தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி அந்த சமுதாயத்தினர் மத்தியில் கடுமையாக நிலவுகிறது. இந்த சூழலை பயன்படுத்தி கொள்ள அதிமுக புது வியூகம் வகுத்துள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் மட்டும் பெரம்பலூர் தொகுதியில் சந்திரமோகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்த தொகுதியில் முத்தரையர் சமுதாயத்தினர் பெரும்பான்மையினர் இல்லை. எனவே தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் முத்தரையர் சமுதாயத்தினர் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை இச்சமுதாயத்தினர் எழுப்பிறனர்.
எவ்வளவு ஓட்டுக்கள் ?
தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் மட்டும் 5 லட்சத்து 38 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளன. பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ஓட்டுக்களும், பேராவூரணி தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுக்களும், திருவையாறு தொகுதியில் 82,000 ஓட்டுக்களும், பாபநாசம் தொகுதியில் 67,000 ஓட்டுக்களும், ஒரத்தநாடு தொகுதியில் 98 ஆயிரம் ஓட்டுகளும், மன்னார்குடியில் 80 ஆயிரம் ஓட்டுகளும் உள்ளன.
இந்த தொகுதியை தவிர திருச்சி, புதுக்கோட்டை சிவகங்கை, மதுரை, வேலூர் உள்ளிட்ட லோக்சபா தொகுதிகளிலும் முத்தரையர் ஓட்டுகள் கணிசமான ஓட்டு வாங்கி உள்ளன.
ஆனால் முத்தரைய சமுதாய சங்கத்தினர் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்பினர்.
தென் சென்னை மாவட்ட த.மா.க., செயலாளரும் அனைத்து முத்திரையர் சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பட்டுக்கோட்டை பூபதி சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு இருந்தார் ஆனால், அவரை போட்டியிட வேண்டாம் முத்திரைய சமுதாயத்தினர் ஓட்டுக்கள் அதிமுகவிற்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பழனிசாமியிடம் வலியுறுத்தல்
தஞ்சாவூர் தெற்கு அதிமுக மாவட்ட செயலரும், முன்னாள் பட்டுக்கோட்டை எம்எல்ஏ.,வுமான சி.வி.சேகர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் முத்திரையர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கு மேலாக வசித்து வரும் முத்திரையர் சமுதாயத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் பழனிச்சாமியிடம் வலியுறுத்தப்பட்டது.
இவரும் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதை அடுத்து சுயேட்சையாக போட்டியிடும் முடிவை முத்திரையர் சமுதாயத்தினர் கைவிட்டுள்ளனர்.

