/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
வியாபாரி கொலை வழக்கில் பெண்ணுக்கு 'இரட்டை ஆயுள்'
/
வியாபாரி கொலை வழக்கில் பெண்ணுக்கு 'இரட்டை ஆயுள்'
ADDED : செப் 09, 2025 12:20 AM

கும்பகோணம்: கீரை வியாபாரி கொலை வழக்கில், பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே வலையபேட்டை மாங்குடியைச் சேர்ந்த அபினேஷ், அஜய் ஆகிய இருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அருண் குமார், 36, என்பவருக்கும் விரோதம் இருந்தது.
கடந்த 2020 மே 19ல், அபினேஷ் உறவினர்கள் ரகுபதி, 40, கிருஷ்ணமூர்த்தி, அருள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, அருண்குமார், தாய் ருக்மணி, 60, கணவர் சவுந்தரராஜன், 65, உறவினர்களான சுரேஷ், 37, பாலாஜி, 30, ஆகியோர் சேர்ந்து, ரகுபதி, கிருஷ்ணமூர்த்தி, அருள் ஆகியோரை தாக்கினர். இரண்டு தரப்பினரையும் விலக்க முயன்ற ரகுபதியின் மாமா கீரை வியாபாரி பன்னீர்செல்வத்தை, அருண்குமார் உள்ளிட்டோர் அரிவாளால் வெட்டியதில் அவர் இறந்தார்.
கும்பகோணம் தாலுகா போலீசார், அருண்குமார் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். இந்த வழக்கில், ருக்மணிக்கு இரட்டை ஆயுள், சவுந்தரராஜன், அருண்குமார், பாலாஜி, சுரேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார்.