UPDATED : நவ 11, 2026 08:04 PM
ADDED : நவ 11, 2026 07:44 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வடக்கு நத்தம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், 52, கூலி தொழிலாளி. இவர் ஓராண்டுக்கு முன், ஆண்டிநத்தம்காடுவைச் சேர்ந்த காமராஜ், 54, என்பவரிடம், மரம் அறுக்கும் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். ஓராண்டாகியும் இயந்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை.
கேரளா மாநிலம், உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்று இருந்த, ராஜ்குமார் கடந்த அக்., 8ல் தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்து இருந்தார். இதையறிந்த காமராஜ் மற்றும் அவரது நண்பர் ரமேஷ், 50, ஆகிய இருவரும், மரம் அறுக்கும் இயந்திரத்தை கேட்டு, தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
மனமுடைந்த ராஜ்குமார் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, நேற்று உயிரிழந்தார். ஒரத்தநாடு போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக காமராஜ், ரமேஷ் ஆகியோரை, கைது செய்தனர்.
