/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சாவூௐரில் குடிநீரில் நெளிந்த புழுக்கள்
/
தஞ்சாவூௐரில் குடிநீரில் நெளிந்த புழுக்கள்
ADDED : பிப் 20, 2024 01:50 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டு, ராமகிருஷ்ணபுரம் மூன்றாவது தெருவில் நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதிக்கு, ராமநாதன் பகுதியில் உள்ள மாநகராட்சி நீர்த்தேக்க தொட்டி வாயிலாக குடிதண்ணீர் வினியோகமாகிறது. இந்நிலையில், 10 நாட்களாக, குடிநீரில் சிறிய தலைமுடி அளவிற்கு, புழுக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
நாங்கள் 10 நாட்களுக்கு முன்,அலுவலர்களிடம் புழு தொடர்பாக புகார் அளித்தோம். ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் கண்டுபிடிப்பதற்கு முன், எத்தனை நாட்கள் வந்ததோ என்று தெரியவில்லை.
நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பல நாட்களாகி விட்டதாக கூறுகின்றனர். மாநகராட்சி அலுவலர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

