/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ரஷ்யா, உக்ரைன் தோழியர் தமிழகத்தில் வழிபாடு
/
ரஷ்யா, உக்ரைன் தோழியர் தமிழகத்தில் வழிபாடு
ADDED : செப் 24, 2024 08:06 PM

தஞ்சாவூர்:ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஷெனியா, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இலியானா இருவரும் தோழியர். ஷெனியா போட்டோகிராபராகவும், இலியானா தனியார் நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர். இலியானா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பில் பயிற்சி பெற்றவர். இருவரும் நான்கு நாட்களுக்கு முன் இந்தியா வந்தனர்; தமிழகத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த திட்டமிட்டனர்.
இரண்டு நாட்களாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள திருநாகேஸ்வரம், திருநள்ளாறு, கஞ்சனுார் சுக்கிரன் கோவில், திருமணஞ்சேரி ஆகிய கோவில்களில் வழிபட்டனர்.
இவர்களை, கும்பகோணத்தைச் சேர்ந்த திருக்குடந்தை புகழேந்தி வழி நடத்தினார். ஆடுதுறை அருகே சாத்தனுார் கிராமத்தில் உள்ள திருமந்திரம் அருளிய திருமூலர் கோவிலில் நேற்று முன் தினம் வழிபாடு செய்தனர்.