/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அறநிலைய அதிகாரிகளை தாக்கிய வாலிபர் கைது; இருவருக்கு வலை
/
அறநிலைய அதிகாரிகளை தாக்கிய வாலிபர் கைது; இருவருக்கு வலை
அறநிலைய அதிகாரிகளை தாக்கிய வாலிபர் கைது; இருவருக்கு வலை
அறநிலைய அதிகாரிகளை தாக்கிய வாலிபர் கைது; இருவருக்கு வலை
ADDED : டிச 01, 2024 01:44 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், பழமை வாய்ந்த ரெங்கநாத பெருமாள் கோவிலில் செயல் அலுவலராக சதீஷ்குமார், கணக்கராக ரெங்கராஜ் பணியாற்றி வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த ராஜரெத்தினம் இரும்பு தகர ஷீட்டால் ஷெட் அமைத்து அலுவலகம் நடத்தி வந்தார்.
இதை காலி செய்ய, கோவில் நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை. நவ., 18ல், தஞ்சாவூர் அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது, ராஜரெத்தினம், அவரது மகன்கள் சரண்குமார், சந்தோஷ் ஆகியோர் கோவில் செயல் அலுவலர் சதீஷ்குமாரை தகாத வார்த்தையில் திட்டி தாக்க முயன்றனர்.
இதை தடுக்க முயன்ற கோவில் கணக்கர் ரெங்கராஜை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், கணக்கர் ரெங்கராஜ் காயமடைந்து, மயங்கி விழுந்தார்.
ரெங்கராஜ் புகாரின்படி, பட்டுக்கோட்டை நகர போலீசார் நான்கு பிரிவுகளில், ராஜரெத்தினம், சரண்குமார், சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். மூவரும் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
கரூரில் ஹோட்டல் ஒன்றில் சரண்குமாரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராஜரெத்தினம், சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

