நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 27. கடந்த 2021ல் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கொலை செய்தார்.ஜாமினில் வெளியே வந்த அவரை கடந்த 13ல் சிலர் பட்டப்பகலில் படுகொலை செய்தனர்.
மணிகண்டன் கொலைவழக்கில் பழிக்கு பழியாக சதீஷ்குமாரை அவரின்நண்பர்கள் கொலை செய்தது தெரிந்தது.
நேற்று காலை தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் சதீஷ்குமாரை கொலை செய்த நபர்கள் இருப்பதாக அறிந்த போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சதீஷ்குமாரை கொலை செய்த டக்லஸ் மணி 33 பிள்ளையார்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் 27 உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.