உத்தரவை மீறி கட்டுமான பணி வருவாய்துறையினர் நிறுத்தம்
உத்தரவை மீறி கட்டுமான பணி வருவாய்துறையினர் நிறுத்தம்
ADDED : நவ 26, 2011 12:46 AM
மூணாறு:மூணாறு அருகே பள்ளிவாசல் கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட சித்திராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் மூவாற்றுபுழையைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.இந்நிலத்தின் வழியே ஆஸ்பத்திரிக்கு செல்ல நடை பாதை இருந்தது.
ஜோசப் தனக்கு சொந்தமான நிலத்தில் ரிசார்ட் கட்டுவதற்கு தேவிகுளம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது, ஆஸ்பத்திரிக்கு செல்லும் பாதைக்கு தேவையான இடத்தை ஒதுக்கி அரசிடம் ஒப்படைத்து விட்டு கட்டுமான பணிகளை செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால் நடை பாதைக்கு இடம் ஒதுக்காமல் கட்டுமான பணிகள் நடந்தது. அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல நடை பாதை இல்லை என கூறி, மாவட்ட சுகாதாரதுறை அதிகாரி தேவிகுளம் சப் கலெக்டர் ராஜமாணிக்கத்திடம் புகார் அளித்தார். வருவாய் துறையினரின் உத்தரவை மீறி நடந்து வந்த கட்டுமான பணிகளை, வருவாய்துறை சிறப்பு அதிகாரி சஞ்சயன் தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
