ADDED : ஏப் 11, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : வீரபாண்டி வயல்பட்டி ஓடைத்தெரு விவசாய தொழிலாளி மகாலட்சுமி 19. இவரது கணவர் கார்த்திக் 24. மது குடிக்கும் பழக்கம் அதிகமானதால் அதை மறப்பதற்கு கார்த்திக் பல்வேறு இடங்களில் சிகிச்சை எடுத்தார். 6 மாதங்களாக குடிக்காமல் இருந்தார். திடீரென மது குடிப்பதை நிறுத்தியதால் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
கடந்த ஏப். 9ல் இரவில் கணவன், மனைவியும் வீட்டில் துாங்கியவர்கள், மறுநாள் காலையில் மனைவி எழுந்த போது, கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின், உடலை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

