ADDED : மார் 26, 2024 07:03 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அரசு போக்குவரத்து டெப்போ அருகே தேசிய ஜனநாயக கூட்டணியின் அ.ம.மு.க., தேனி லோக்சபா தொகுதி வேட்பாளர் தினகரன் பிரசாரம் துவங்கினார்.
இதன் பின் ஒன்றியப் பகுதியான வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, எண்டப்புளி வரை பிரசாரம் செய்தார். வழி நெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. நகர, ஒன்றிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
