sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நெல் வயல்களில் "பரம்பு' அடிக்கும் காளைகள் : நவீன யுகத்திலும் மாறாத தொழில் நுட்பம்

/

நெல் வயல்களில் "பரம்பு' அடிக்கும் காளைகள் : நவீன யுகத்திலும் மாறாத தொழில் நுட்பம்

நெல் வயல்களில் "பரம்பு' அடிக்கும் காளைகள் : நவீன யுகத்திலும் மாறாத தொழில் நுட்பம்

நெல் வயல்களில் "பரம்பு' அடிக்கும் காளைகள் : நவீன யுகத்திலும் மாறாத தொழில் நுட்பம்


ADDED : ஜூலை 13, 2011 10:27 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : எத்தனை நவீன கருவிகளும், கண்டுபிடிப்புகளும் வந்தாலும், நெல் வயலில் பரம்பு அடிப்பதற்கு காளை மாடுகள் பூட்டிய கருவி தான் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் அதிகளவில் நெல் சாகுபடி நடக்கிறது. விவசாயத்தில் இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. களை எடுப்பதற்கும், நாற்று நடவு செய்வதற்கும், அறுவடைக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. நெல் விவசாயத்தில், வயலில் உழவு முடிந்த பின், நாற்று நடுவதற்கு முன்பாக வயலை சமப்படுத்த 'பரம்பு' அடிப்பார்கள். அதற்கு காளை மாடுகள் பூட்டி, பரம்பு அடிக்கின்றனர். டிராக்டர் மற்றும் அதற்குரிய கருவிகளில், இதை செய்ய முடியாது என விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'கம்பம் பள்ளத்தாக்கில் வயல்கள் சிறிய அளவுகளில் உள்ளன. நவீன கருவிகளில் பரம்பு அடித்தால், சரியாக இருக்காது. காளை மாடுகள் பூட்டி பரம்பு அடித்தால் தான் திருப்தியாக இருக்கும்,' என்றனர். விஞ்ஞானிகள் எத்தனைதான் கருவிளை கண்டுபிடித்து கொடுத்தாலும், பராம்பரிய முறைகளையும் விவசாயிகள் புழக்கத்தில் வைத்துள்ளனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.








      Dinamalar
      Follow us