நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேனியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலுவலகம் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை மவுன ஊர்வலம் நடந்தது.
கட்சியின் தாலுகா செயலாளர் தர்மர் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். தொடர்ந்து பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் சீதாராம் யெச்சூரி உருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், கண்ணன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள், பொருளாளர் ராஜ்குமார், வி.சி.க., அகில இந்திய பார்வர்ட்பிளாக் உள்ளிட்ட கட்சியினர் நிகழ்வில் பங்கேற்றனர்.