ADDED : மார் 26, 2024 06:21 AM

போடி : லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ தலைமை வகித்தார். 'வெறும் மை அல்ல, நாட்டின் ஆளுமை, விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம், மனதில் உறுதி வேண்டும், வாக்கின் வலிமை தேசத்தின் உரிமை' என்ற வாசகங்கள் ஏந்திய பதாகைகளுடன் பணியாளர்கள் ஊர்வலமாக சென்றனர்.
போடி அரசு பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது. திட்ட அலுவலர் மணிமாறன், ஒய்.ஆர்.சி., திட்ட அலுவலர் குபேரராஜா முன்னிலை வகித்தனர். மக்களிடம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பதாகைளுடன் மாணவர்கள் மேலச்சொக்கநாதபுரத்தில் ஊர்வலமாகசென்றனர்.
