ADDED : ஏப் 18, 2024 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: லோக்சபா தேர்தலில் தேனி மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல்நடத்தும் அலுவலர் தலைமையில் 100 கி.மீ., நடைபயணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏப்.,7 ல் துவங்கியது. அதன் நிறைவு விழா வடபுதுப்பட்டியில் துவங்கி தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் வரை நடந்தது.
இதில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா, நகர்நல அலுவலர் கவிபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

